60. பரலோகத்தில் பாவிகள் | SINNERS IN HEAVEN
Update: 2020-08-16
Description
தொப்புள்கொடி அறுக்கப்பட்டு அழும்போது
அப்பாவிதான்!
தொட்டிலில் வாழ்வைத் தொடங்கும்போது
அப்பாவிதான்!
தொடக்கக் கல்வியிலேயே தொய்ந்தபோதும் அப்பாவிதான்!
தொடங்கிய உயர்கல்வியோடுபோராடும்போதும்
அப்பாவிதான்!
தொங்கித்தொங்கி வேலைதேடிய போதும்
அப்பாவிதான்!
தொடர்ந்து வேலைசெய்து களைத்தபோதும்
அப்பாவிதான்!
தொடர்ச்சியாக அமைத்த மணவாழ்விலும்
அப்பாவிதான்!
தொடர்வண்டியாக பிள்ளைகள் பெற்றபோதும்
அப்பாவிதான்!
தொற்றிப்படர்ந்த தொல்லைகளின் போதும்
அப்பாவிதான்!
தொய்ந்த வாழ்வைஏற்றி நிமிர்த்தியபோதும்
அப்பாவிதான்!
தொடுஉணர்வு இழந்த வயோதிகத்தின்போதும்
அப்பாவிதான்!
தொட்டாச்சிணுங்கியாக இறுதியில்வாழ்ந்தபோதும்
அப்பாவிதான்!
தொண்டுசெய்ய பலரிருந்தபோதும்
அப்பாவிதான்!
தொந்தரவு பலதந்தாலும் உள்ளுணர்வில்
அப்பாவிதான்!
தொடர்ந்து அப்பாவியாக வாழ்ந்தவன்எப்படபாவியாகி அங்குநிற்கிறாய்!
Comments
In Channel























